தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரைவில் பாஜக மாநில தலைவர் நியமனம் - பொன். ராதாகிருஷ்ணன் - press meet,

தஞ்சாவூர்: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் விரைவில் நியமிக்கப்படலாம் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

pon.radhakrishnan

By

Published : Oct 9, 2019, 11:35 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணதில் மத்திய முன்னாள்அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "பிரதமர் மோடியும் சீன அதிபரும் சந்திக்கும் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதால் இந்தியப் பொருளாதாரம் மேம்படும், தமிழ்நாட்டிற்கும் சீனாவிற்குமிடையே உள்ள தொன்மையான உறவை பலப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாடு அரசு செய்து வரும் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றார். தமிழ்நாடு பாஜகவைப் பொறுத்தவரை தற்போது அமைப்புத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பு தேர்தல் முடிந்த பின்னர்தான் மாநில தலைமைக்கு தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கிடையில் பாஜக தலைமை மாநில தலைவரை நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details