தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் அதிமுகவில் பல பொறுப்புகளை வகித்துவந்துள்ளார். தற்போது தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராகவும் இருந்துவருகிறார். பக்கிரிசாமி நேற்று (டிசம்பர் 21) காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், மதுரையில் வட்டாட்சியராக இருக்கக்கூடிய தனது நண்பர் தனலட்சுமி என்பவர் தன்னை அணுகி, அவரது மகன் பாஸ்கருக்கு மின்சாரத் துறையில் உதவிப் பொறியாளர் பணி வாங்கித் தருமாறு கூறியதாகவும், அதனால் தனது நண்பர் நாமக்கல் எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி என்பவர் மூலமாக அப்போதைய மின்சாரத் துறை அமைச்சராக இருந்த தங்கமணியிடம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
உதவிப் பொறியாளர் பணிக்கு 30 லட்சம்?