தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ.வான கோவி செழியன். தற்போதைய திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக உள்ளார். இவரது அலுவலகம், கும்பகோணம் மயிலாடுதுறை சாலை கோவிந்தபுரம் அருகேயுள்ள திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இரவு அலுவலகத்தைப் பூட்டி சென்றுவிட்டு நேற்று 24ஆம் தேதி காலை அலுவலகம் வந்து பார்த்த அலுவலக உதவியாளர் அன்பழகன், அலுவலகத்தின் பின்புறம் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள நீர்மூழ்கி மோட்டார் திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.