தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் கார்டு மூலமாக வாக்காளர்களுக்குப் பணப் பரிமாற்றம்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே ஏடிஎம் கார்டு மூலமாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக பறக்கும் படையினர் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Election money destitution
Election money destitution

By

Published : Dec 23, 2019, 12:27 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருவோணம் ஒன்றியத்திற்குட்பட்ட வண்ணன் கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வம். திருவோணம் பகுதியில் ஏடிஎம் கார்டு மூலமாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக வட்டாட்சியர் செந்தில் குமாருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற பறக்கும் படையினர் திருச்செல்வத்தை விசாரணை செய்ததில், அவர் முறையாக பதில் கூறாததால் அவரிடமிருந்த ரூ.ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

பணம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

இப்பணத்தை திருவோணம் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகனிடம் ஒப்படைத்த பறக்கும் படையினர், இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் திருச்செல்வத்திடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க: போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நாளை கட்டாயம் விடுப்பு எடுக்கக் கூடாது - மேலாண்மை இயக்குநர் ஆணை!

ABOUT THE AUTHOR

...view details