தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சிவப்பிரகாசம் நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (59). இவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று, கடந்த 7ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த குமரேசன், திருவையாறு காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இவரது உடல் உப்பு காச்சிபேட்டை பகுதியில் கரை ஒதுங்கியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.