தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர் கிராமத்தில் உள்ள தோப்புத்தெருவில் விவசாயி கலியமூர்த்தி(85). இவர் தனது மனைவி சரோஜா(75) உடன் வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது முதிர்ச்சியால் உடல் நலம் குன்றியிருந்த நிலையில், இன்று நேற்று (பிப்.23) விவசாயி கலியமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சரோஜாவும் அடுத்த சில மணி நேரங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இவ்வாறு அடுத்தடுத்து கணவன் மனைவி உயிரிந்த சம்பவம் இன்னம்பூர் கிராமத்தையும், அவர்களது உறவினர்கள், நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய போதும், சாவிலும் இணை பிரியாத தம்பதியினரை கண்டு பலரும் வியந்தனர். அவர்களது அன்யோன்யத்தை அப்பகுதியினர் அனைவரும் பாராட்டி பெருமையாக பேசிக் கொண்டனர்.