தஞ்சாவூர்:தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி முதல் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம் மற்றும் மணல் குவாரிகள் மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இன்று (அக்.12) தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே கொள்ளிடம் ஆற்றில் கோவிலடி(ஊர்), மருவூர் பகுதியில் உள்ள அரசு மணல் குவாரிகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது டிரோன் கேமராவை இயக்கி ஆய்வு செய்தனர். மணல் குவாரியில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டுள்ளதா எனவும், முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா எனவும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் நீர்வளத்துறை அதிகாரிகள், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர்.