தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன் விரோதம்: பூ வியாபாரி கொலை

தஞ்சாவூர்: முன்விரோதம் காரணமாக, பூ வியாபாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன் விரோதம் காரணமாக பூ வியாபாரி கொலை
முன் விரோதம் காரணமாக பூ வியாபாரி கொலை

By

Published : May 25, 2021, 6:56 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த ஈச்சங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாலன் (50). இவரை, அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் ராஜதுரை உள்ளிட்டோர் காரில் கடத்தி சென்று விட்டதாக, கபிஸ்தலம் காவல் நிலையத்தில் பாலன் மகன் பாபு புகார் அளித்தார். அதன்பேரில் கபிஸ்தலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இதனிடையே திருவையாறு அடுத்த சிறுபுலியூர் தூரி ஆறு வாய்க்கால் அருகே விஜயகுமார் என்பவரின் எள்ளு வயலில் ஒருவர் தலையில் வெட்டுப்பட்டு இறந்து கிடப்பதாகத் திருவையாறு காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினருக்கு இறந்து கிடப்பது பாலன் என்பது தெரியவந்தது. உடனே சலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காகப் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பாலன், சந்திரன் ஆகிய இருவரும் நண்பர்கள் என்பதும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் பாலன் சந்திரனின் விரலை வெட்டினார். பின்னர் சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பாலன் கைது செய்யப்பட்டார்.

தற்போது சிறையிலிருந்து வெளியே வந்த பாலன் சுந்தர பெருமாள் கோயிலில் தங்கி பூ வியாபாரம் செய்து வந்தார். சந்திரன் மகன் ராஜதுரை தன் தந்தையின் விரலை வெட்டியவரை உயிரோடு விடக்கூடாது என்ற எண்ணத்தில், பாலனை கடத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: சூப்பர் மார்க்கெட் கதவை உடைத்து ஏழு லட்சம் ரூபாய் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details