தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு: தஞ்சையில் மாலை 4 மணிவரை மட்டும் கடைகள் இயங்கும்! - கரோனா எண்ணிக்கை

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கரோனா பாதிப்பின் காரணமாக அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டது.

கரோனா பாதிப்பு: தஞ்சையில் மாலை 4 மணிவரை மட்டும் கடைகள் இயக்கம்!
Thanjavur corona cases

By

Published : Aug 11, 2020, 10:07 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கரோனா பாதிப்பு அதிகளவில் பரவிவருகிறது.

இதனால், அனைத்து வணிகர்கள், பேரூராட்சி, காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் 10ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே திறந்து வைக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.

அதன் பேரில் நேற்று முதல் வரும் 20ஆம் தேதி வரை அனைத்து கடைகளும் மாலை 4 மணியுடன் மூடப்பட்டது. இதனால், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details