கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியைச் சேர்ந்தவர் முகமது காபூஸ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, கடந்தாண்டு சொந்த ஊர் திரும்பினார். இவருக்கும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வடகரையைச் சேர்ந்த காபத்து நிஷா என்பவருக்கும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
30 சவரன் நகை வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட நிலையில், அதில் 13 சவரனை நிஷா தனது பெற்றோரிடம் திரும்பக் கொடுத்துவிட்டதாகவும், அந்த நகையைத் திரும்பக் கேட்டு முகமது காபூஸும், அவரது பெற்றோரும் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நிஷா சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கணவர் தரப்பிலிருந்து நிஷாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.