தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் 20க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கரோனா தொற்றை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர்.கோவி செழியன், வார்டு உறுப்பினர் வாசுகி ஆகியோர் அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள், பணம் ஆகியவற்றை வழங்கினர். இதனை சமூக இடைவெளியை கடைப்பிடித்து தூய்மைப் பணியாளர்கள் பெற்றுச் சென்றனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு நிவராணப் பொருள்கள் வழங்கிய திமுக - திமுக
தஞ்சாவூர்:கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக சார்பில் காய்கறி, அரிசி, பணம் உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கப்பட்டது.
relief items
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மயிலாடுதுறை நாடளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கூறுகையில், பல்வேறு ஊராட்சியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.