திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உழவர் சந்தையின் பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தின் முன்பாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நாகப்பட்டினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் கலந்து கொண்டார்.
திருத்துறைப்பூண்டியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் - பயிர் காப்பீடு
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 2019-20ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
DMK party members protest in thiruthuraipoondi
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தின்போது திருத்துறைப்பூண்டியில் பயிர்காப்பீடு தொகையில் விடுபட்டுள்ள 360 கிராமங்களின் பெயர்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும், வேளாண் துறை அலுவலர்கள் இடைத்தரகர்களை பயன்படுத்தி ஊழல் செய்யப்பட்டதால் வேளாண்துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.