தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற கொண்டாட்டம்: அண்ணாவை மறந்துவிட்டதா திமுக? - Thanjavur District important News

தஞ்சாவூரில் திமுக கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற கொண்டாட்டத்தில் பேரறிஞர் அண்ணாவை மறந்துவிட்டனர் என மக்கள் பேசிக்கெண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற கொண்டாட்டம்
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற கொண்டாட்டம்

By

Published : Dec 14, 2022, 11:08 PM IST

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற கொண்டாட்டம்: அண்ணாவை மறந்துவிட்டதா திமுக?

தஞ்சாவூர்: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

முன்னதாக மண்டலத் தலைவர் மேத்தா தலைமையில் ஒரு கோஷ்டியாகவும், பின்னர் பகுதி செயலாளர் நீலகண்டன் தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் தனித்தனியாக பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிலையில் திமுகவின் முக்கிய நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். ஆனால் இன்று அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்காமல் அவரை கண்டு கொள்ளாமல் திமுகவினர் இருந்தனர். இச்செயல் பேரறிஞர் அண்ணாவை திமுகவினர் மறந்துவிட்டனர் போல என பொதுமக்கள் பேசிக்கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க:உதயநிதியை விட திறமையானவர்கள் திமுகவில் உண்டு: காடேஸ்வரா சுப்பிரமணியம்

ABOUT THE AUTHOR

...view details