தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். பின்னார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக மட்டுமல்ல அனைத்து தோழமைக் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளன.
தொகுதி மறுவரையரை முறையாக செய்யாமல், அவசர கோலத்தில் குழப்பத்திற்கு மேல் குழப்பமாக தமிழ்நாடு அரசு இந்த உள்ளாட்சி தேர்தலை நடத்த முயல்கிறது. இதன்மூலம் எப்படியும் தாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று அரசு நினைப்பதால், நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளது" என்றார்.