ஆண்டு தோறும் ஜூலை மாதம் 20 ஆம் தேதி சர்வதேச சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூர் கும்பகோணத்தில் சதுரங்கப் போட்டி மிகவும் பிரபலம். இந்த விளையாட்டை விளையாடுவதால் மாணவ, மாணவிகளுக்கு மன ஒருமைப்பாடு, யோசிக்கும் திறன், மாறுபட்டு சிந்தித்து செயல்படும் திறன், ஞாபகத் திறன் போன்ற பல நன்மைகள் இதன் முலம் கிடைக்கிறது.
மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி
தஞ்சாவூர்: சதுரங்க விளையாட்டை மாணவ, மாணவிகளிடையே ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி, கும்பகோணத்தில் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது
சர்வதேச சதுரங்க தினத்தையொட்டி சதுரங்க விளையாட்டை மாணவ, மாணவிகளிடையே ஊக்குவிக்கும் வகையில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் ஆண்டாக கல்வி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. ஜந்து பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் கும்பகோணத்தை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.