தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம், கோட்டை ரோட்டரி சங்கம் இணைந்து மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை நடத்தின. பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 650-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டுவரும் இப்போட்டியானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
மாவட்ட சதுரங்கப் போட்டி: மாணவர்கள் ஆர்வம் - பள்ளி மாணவ - மாணவியர்கள்
தஞ்சை: பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
chess
இது திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு, கோப்பை, சான்று ஆகியவை வழங்கப்படவிருக்கின்றன. இந்தச் சதுரங்கப் போட்டி ஏழாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.