தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சோழபுரத்தை அடுத்துள்ள பனங்குடம் கிராமத்தில் இருளர் இன பழங்குடி மக்கள் பலர் வசித்து வருகின்றனர். இது போல தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்குப் பழங்குடி இன சாதி சான்றிதழ் வேண்டுமென அரசிற்குக் கோரிக்கைகள் விடுத்துக் காத்திருந்த நிலையில், தற்போது இவர்களுக்குப் பழங்குடி இன மக்களுக்கான சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இன்று மட்டும் பனங்குடம் கிராமத்தில் உள்ள பழங்குடியினர் 105 நபர்களுக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கினார்.