தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வருங்காலத்தில் அமமுகதான் மிகப்பெரிய கட்சியாக விளங்கும்' - விடாப்பிடியாக இருக்கும் டிடிவி தினகரன்! - தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள்

தஞ்சை : தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

dinakaran_bye

By

Published : Sep 17, 2019, 5:21 PM IST

Updated : Sep 17, 2019, 7:35 PM IST

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் அரசன், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டிடிவி தினகரன்செய்தியாளர் சந்திப்பு

பின்பு செய்தியாளரைச் சந்தித்து பேசிய தினகரன், இந்தியை எதிர்க்கவில்லை. ஆனால் இந்தி திணிப்பதைத் தடுக்க வேண்டும். மத்திய அரசு இந்தியை தமிழ்நாட்டில் திணிக்காது என்ற நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தார். அமமுகவின் செல்வாக்கு வளர்ந்து வருவதாகவும், வருங்காலத்தில் அமமுக தான் தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாக, பெரியகட்சியாக விளங்கும் எனவும் டிடிவி தினகரன் கூறினார். மேலும், சசிகலாவை விரைவில் ஜெயிலில் இருந்து விடுவிக்க முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

Last Updated : Sep 17, 2019, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details