தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருமாதி போராட்டம் என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.! - தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நெய்வேலி கிராமம்

தஞ்சை: நெய்வேலி என்ற கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கருமாதி போராட்டம் என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

கருமாதி போராட்டம் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்

By

Published : Nov 25, 2019, 1:17 PM IST


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ளது நெய்வேலி கிராமம். இந்த கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு பணி முடிக்கப்படாமலும், சாலை பணி நிறைவுறாமலும், இதேபோல மின்சார பணி மயானம் அமைக்கும் பணி ஆகிய அனைத்து பணிகளும் முடிவுறாத நிலையில் இருந்துவருவதாகவும் நெய்வேலி வடபாதி, தென்பாதி ஆகிய பகுதிகளில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

கருமாதி போராட்டம் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்

இதையடுத்து தமிழ்நாடு சமூக நீதி கழகம் என்ற அமைப்பின் மூலம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நூதன முறையில் கருமாதி போராட்டம் நடத்தப்போவதாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details