தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை பெருவுடையார் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்குத் தடை - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தஞ்சை பெருவுடையார் கோயிலில் பக்தர்கள் வருவதற்கு இன்று (ஏப்.16) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

thanjavur temple
தஞ்சாவூர் பெரிய கோயில்

By

Published : Apr 16, 2021, 3:55 PM IST

கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. என்றாலும், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட புராதான சின்னங்கள், நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தலங்களுக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தஞ்சை பெருவுடையார் கோயிலில் பக்தர்கள் செல்ல இன்று (ஏப்.16) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் கோயில் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டு'ம் வந்தார் பெரியார் ஈவெரா!

ABOUT THE AUTHOR

...view details