தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் இருந்து கோடியக்கரைக்கு கொண்டுசெல்லப்பட்ட மூன்று புள்ளி மான்கள் மாயம்! - Kodiyakarai Tourism

தஞ்சாவூர்: மத்தியரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்கு சொந்தமான சிவகங்கை பூங்கா 8.10 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. பூங்காவில் இருந்து கோடியக்கரை வனச்சரணாலயத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட மூன்று புள்ளி மான்கள் மாயம்.

வன விலங்கு ஆர்வலர் சரவணன்

By

Published : Oct 3, 2019, 7:19 AM IST

நாஞ்சிக்கோட்டை சேர்ந்த வன விலங்கு ஆர்வலர் சரவணன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், வனவலிங்குகள், பறவைகள் குறித்து கேட்ட போது, 44 மான்கள், 8 முயல், 40 புறா, 6 சீமை எலி, 2 பச்சைகிளிகள் பராமரிக்கப் பட்டதாக, மாநகராட்சி நிர்வாகத்தால் பதிலளிக்கப்பட்டது. ஆனால், கோடியக்கரைக்கு 41 மான்கள் மட்டுமே கொண்டு செல்லப்பட்டதாக,வனத்துறை அதிகாரிகள் தகவல் கூறுகின்றார்.

இது குறித்து சரவணன் கூறியதாவது, ஸ்மார்ட் சிட்டி பணிகள் துவங்கிய போது, பூங்கா குறித்த கேள்வியை ஆர்.டி.ஐ.,யில் கேட்ட போது, 44 மான்கள் இருப்பதாக பதில் தந்துள்ளனர். ஆனால், 41 புள்ளி மான்கள் தான் கோடியக்கரை வனச்சரணாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறுகிறார்.

வன விலங்கு ஆர்வலர் சரவணன்

வன அலுவலரிடம் கேட்கையில் முறையாக பதில் அளிக்கவில்லை. மூன்று மான்களின் நிலை என்ன, அவை யாரிடமும் விற்கப்பட்டதா அல்லது, தனி நபரின் விருப்பத்திற்காக இறைச்சியாக்கப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதை அரசு விசாரிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க : 'என்னை யாருக்குமே பிடிக்கவில்லை...!' - காப்பாளரின் மடியில் சோகத்தில் படுத்த யானைக்குட்டி!

ABOUT THE AUTHOR

...view details