கரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலை செய்வதற்காக, மருத்துவத்திற்காக, கல்விக்காக சென்ற தமிழர்கள் பலர் இதனால் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர்.
சொந்த ஊர்களுக்குத் திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மக்களை உடனடியாக மீட்கக் கோரியும், அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இணைய வழிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி மாவட்டம், கிளைகளில் மாபெரும் இணையவழி ஜூன் 15ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த இணைய வழிப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பங்கேற்றார்கள்.