தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 26, 2020, 1:57 AM IST

ETV Bharat / state

ஊரடங்கு: மாவட்ட எல்லைகளை மூடிய காவல்துறை!

தஞ்சை: கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக நாடுமுழுவதும் 21 நாள்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்ட எல்லைகளான கல்லணை, பூண்டி, செங்கரைப் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

curfew-district-police-covering-district-boundaries
curfew-district-police-covering-district-boundaries

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை, 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், பத்து பேர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நேற்று நள்ளிரவு முதல் 21 நாள்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து அரசின் ஆணையை ஏற்று அனைத்து மாநிலங்களும் நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கைப் பின்பற்றி வருகின்றன. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு மாநிலத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் தஞ்சை மாவட்ட எல்லைகளை காவல்துறையினர் மூடியுள்ளனர்.

இருப்பினும் பொதுமக்கள் வழக்கம் போல் பொதுவெளியில் நடமாடத்தொடங்கியதால் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடைவீதி, காய்கறி சந்தைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமானால் அவற்றையும் மூடும் படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:'நாகையில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை' - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

ABOUT THE AUTHOR

...view details