தஞ்சாவூர்:குழந்தை இயேசு கோயில் பகுதியில், பிரபாஹரன்வீரராஜ் (31), நிஷாந்த் (27) ஆகிய இரு பட்டதாரி நண்பர்கள், கூபிட்ஸ் கார்னர் (cupids corner) என்ற லவ் கஃபோ (love cafe) ஒன்றை நடத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த கஃபேயில், பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.
இங்கு சிற்றுண்டி மற்றும் ஜூஸ் குடிக்க வரும் காதலர்கள், நண்பர்கள், பொதுமக்கள் ஆகியோர் தங்களது காதல், நட்பு, அன்பு மற்றும் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் இடமாக இந்த கஃபே அமைந்துள்ளது. இங்கு லவ் லாக் (love lock) பூட்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளது. அதில், நண்பர்கள், காதலர்கள் தங்களது பெயரை எழுதிச் செல்கின்றனர்.