தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் சம்பா சாகுபடி நிறைவடைந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயார் அடைந்துவருகின்றனர். சமீபகாலமாக கடும் வெயில் வாட்டி வதைப்பதால் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் அத்தனை ஏரிகளிலும் தண்ணீர் வறண்டு போய்விட்டன. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாது என பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டனர்.
தண்ணீர் இல்லை; கருகும் நிலையில் கோடை சாகுபடி பயிர்கள் - பட்டுக்கோட்டை
தஞ்சாவூர்: நிலத்தடி நீர் அதள பாதளத்துக்கு சென்றதால் கோடை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
![தண்ணீர் இல்லை; கருகும் நிலையில் கோடை சாகுபடி பயிர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3298589-thumbnail-3x2-t.jpg)
தண்ணீர் இல்லை; கருகும் நிலையில் கோடை சாகுபடி பயிர்கள்
தண்ணீர் இல்லை; கருகும் நிலையில் கோடை சாகுபடி பயிர்கள்
இதையடுத்து, ஆழ்குழாய் கிணறு வைத்திருக்கும் சிலர், கோடை சாகுபடி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் சில விவசாயிகள் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கினர்.
இந்நிலையில், அப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர் கடுமையாக குறைந்துவிட்டது. இதனால் பெரும்பாலான ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் கோடை சாகுபடி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.