தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரையில் வசிப்பவர் நாகலட்சுமி. நேற்றிரவு இவரது விட்டின் பின்புறம் சுமார் எட்டடி நீளமுள்ள முதலை புகுந்தது. இதனைக் கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் வீட்டுக்குள் புகுந்த முதலை! - முதலை
தஞ்சாவூர்: வீட்டின் பின்புறம் எட்டு அடி நீளமுள்ள முதலை பதுங்கியிருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
அணைக்கரை
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் முதலையை பிடித்து அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.
கோடைகாலம் நெருங்கிவருவதால் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் இரை தேடி அணைக்கரை கொள்ளிட ஆற்றில் உள்ள முதலைகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. எனவே, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான முதலைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.