பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெருமாள் கோயில் தெரு அமைந்துள்ளது. அங்குக் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு ஏற்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியுள்ளது. இதைச் சரிசெய்வதற்குப் பலமுறை கோரிக்கை வைத்தும்; சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கின்றனர்.
அந்தக் குழாய் உடைப்பினால் வெளியேறும் நீர் சாலையில் தேங்கி நிற்பதால், இரண்டு இடங்களில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி மிகுந்த ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீர் பெருக்கெடுத்து ஓடி, அப்பகுதி வணிக வளாகங்களுக்குள் புகுந்து சிரமத்தை உண்டாக்குகிறது.
ஆபத்தான நிலையில் சாலையில் பள்ளம் - சீரமைக்கப் பொதுமக்கள் வேண்டுகோள்!
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் பகுதியில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் தேங்கி, ஆபத்தான நிலையில் பள்ளம் உருவாகியுள்ளதைச் சரி செய்வதற்குப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் சாலையில் பள்ளம்
மேலும் நோய்ப் பரவும் அபாயம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு சாலையில் ஆபத்தாக உள்ள மரணக்குழிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வாடிக்கையாளர் போல் நடித்து நூதன திருட்டு - வெளியான சிசிடிவி காட்சிகள்!