தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைதிப் பேச்சுவார்த்தை - சாலை மறியல் வாபஸ்

தஞ்சாவூர் : அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆச்சாம்பட்டியில் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அமைதி பேச்சுவார்த்தை
அமைதி பேச்சுவார்த்தை

By

Published : Oct 31, 2020, 1:16 AM IST

செங்கிப்பட்டி-புதுக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில், ஆச்சான் ஏரியின் குறுக்கே இடியும் நிலையில் உள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைத்துத்தர வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலர் இரா.இராமச்சந்திரன் தலைமையில் செங்கிப்பட்டி-ஆச்சாம்பட்டி சாலையில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சிவக்குமார் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். முன்னதாக நெடுஞ்சாலைத் துறையால் நேற்று (அக்.30) காலை முதல் பாலத்தை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் திடீரெனத் தொடங்கப்பட்டு நடைபெற்றன.

அமைதி பேச்சுவார்த்தை

இந்நிலையில் நேற்று மாலை ஆறு மணிக்கு பூதலூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், காவல் துறை சார்பாக திருவையாறு துணைக் காவல் கண்காணிப்பாளர், நெடுஞ்சாலைத்துறை திருவையாறு கோட்ட செயற்பொறியாளர், உதவி பொறியாளர், ஆச்சாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர்.இராமச்சந்திரன் உள்ளிட்டோர் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில், பழுதடைந்துள்ள மேற்படி பாலத்தினை 10 தினங்களுக்குள் கான்கிரீட் சுவர் மூலம் பாதுகாப்பாக பலப்படுத்தி சாலையினை சீரமைப்பதாகவும், வடகிழக்கு பருவமழை முடிந்தபின் புதிய பாலம் உடன் கட்ட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் கூட்டாய்வு செய்து,அதனடிப்படையில் கனரக வாகனங்களை மாற்று பாதையில் இயக்க நடவடிக்கைகள் எடுப்பதற்க்கு அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சிபிஐ கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: மங்களூரு ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு; நால்வர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details