தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ் (41). சுரேஷின் மனைவி வினோதினி (39). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
வெளிநாட்டில் வேலை செய்துவந்த சுரேஷ் கடந்த ஜனவரி மாதம் நாடு திரும்பியுள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால், இவர் மீண்டும் பணிக்குத் திரும்பவில்லை.
இந்நிலையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி இரவு, வினோதினி திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த சுரேஷ், ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தம்பதி தற்கொலை குறித்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இவர்கள் குடும்பத் தகராறு, கடன் தொல்லை போன்ற ஏதேனும் காரணங்களால், தற்கொலை செய்துகொண்டனரா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:விடுமுறை இல்லாததால் ஊருக்கு வராத கணவன் - தூக்கில் தொங்கிய மனைவி