திருக்காட்டுப்பள்ளி அருகே புதுப்பட்டியில் உள்ள ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பின் சார்பாக, உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்து, மாபெரும் விழிப்புணர்வுக் கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வை பூதலூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையைச் சேர்ந்த திட்ட அலுவலர் மேரி ஜெயபிரபா தலைமையிலான அங்கன்வாடி பணியாளர்கள் குழு தனி நபர் சுகாதாரம், வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் வழிமுறைகள், நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படுத்துதல் ஆகியவை குறித்த தகவல்களை விரிவாக எடுத்துக் கூறியது.
எப்படி கைகளைக் கழுவுவது என்பதையும் செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவனர் சத்தியநாதன், முதல்வர் குமரன், துணை முதல்வர் சையது கமுருதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.