தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரியக்கூடியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் அலுவலக ஓட்டுநருக்கு கரோனா- அலுவலகத்திற்கு சீல்!
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வேளாண்மைத் துறை அலுவலகத்திற்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
Corona to office of Assistant Director of Agriculture Driving- Seal to Office!
அதனைத் தொடர்ந்து மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் பூட்டப்பட்டது. தொடர்ந்து மதுக்கூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.
மேலும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய 20 அரசு ஊழியர்களுக்கு மதுக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.