தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: சுற்றுலாத் தலமான கல்லணை திறக்கத் தடை - தஞ்சாவூர்

தஞ்சாவூர்: ஊரடங்கை முன்னிட்டு சுற்றுலாத் தலமான கல்லணை நேற்று (ஏப். 20) மூடப்பட்டது.

கரோனா: சுற்றுலா தலமான கல்லணை திறக்க தடை
கரோனா: சுற்றுலா தலமான கல்லணை திறக்க தடை

By

Published : Apr 21, 2021, 8:21 AM IST

உலகப் பிரசித்திப்பெற்ற கல்லணையானது தஞ்சை திருச்சி மாவட்டங்களின் எல்லையில் உள்ளதால் கல்லணைக்கு நாள்தோறும் திருச்சி, தஞ்சை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர்.

தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்து தான் காணப்பட்டது.

இந்நிலையில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால் மத்திய, மாநில அரசின் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் கல்லணை சுற்றுலாத் தலமும் முழுமையாக மூடப்பட்டது.

கல்லணையில் உள்ள பூங்காக்கள், மணிமண்டபம் போன்ற இடங்களுக்குச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details