தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையில் இன்று ஒரேநாளில் மாவட்டத்தில் 179 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 369ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூரில் இன்று 179 பேருக்கு கரோனா பாதிப்பு! - covid-19 in tanjore
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப். 26) 179 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா
தொடர்ந்து எட்டாயிரத்து 966 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், ஆயிரத்து 236 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் சிகிச்சைப் பலனின்றி மாவட்டத்தில் 167 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா மரணத்தில் சந்தேகம் - உடலைத் தோண்டி எடுத்து நடைபெற்ற உடற்கூறாய்வு!