தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் மேலும் 188 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா தடுப்பு நடவடிக்கை

தஞ்சாவூர்: மாவட்டத்தில் புதிதாக 188 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,554ஆக உயர்ந்துள்ளது.

Corona guarantees 188 more in Tanjore!
Corona guarantees 188 more in Tanjore!

By

Published : Jul 30, 2020, 2:04 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 29) ஒரே நாளில் 6 ஆயிரத்து 426 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் 188 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,554ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியதன் மூலம், மாவட்டத்தில் இதுவரை 1,460 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் மாவட்டத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details