தமிழ்நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இன்று (ஜூலை 31) ஒரே நாளில் 5 ஆயிரத்து 881 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் ஒரே நாளில் 97 நபர்களுக்கு கரோனா உறுதி! - கரோனா உயிரிழப்பு நிலவரம்
தஞ்சை: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 97 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,748ஆக அதிகரித்துள்ளது.
Corona guaranteed for 97 people in one day in Tanjore!
இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 97 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,748ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,114ஆக உள்ளது. அதேசமயம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28ஆக உள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 72 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.