தஞ்சையில் ஒரேநாளில் கரோனாவிலிருந்து குணமடைந்த 172 பேர் - கரோனா
தஞ்சாவூர்: இன்று (செப்டம்பர் 4) ஒரேநாளில் 172 பேர் கரோனா நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இன்று (செப்டம்பர் 4) 164 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 191 நபர்கள் கரோனா தொற்று பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்றுள்ளனர். கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தொற்றிலிருந்து குணமடைந்து இன்று ஒரேநாளில் 172 பேர் வீடு திரும்பியுள்ளனர். 982 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 119 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.