திருவையாறு அருகே விளாங்குடி சோதனைச் சாவடியில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், திருவையாறு தாசில்தார், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சாமிநாதன், சுஜாதா, காவல் துறை அதிகாரி ஜெகதீசன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரவி, ஊராட்சி மன்றத்தலைவர் கதிர்காமு, ஒன்றிய குழு உறுப்பினர் விஜயா ஆகியோர் முன்னிலையில், சுகாதார துறை இணை இயக்குநர் ராணி, மாவட்ட கொல்லை நோய் தடுப்பு அலுவலர் ஆடல் அரசி மற்றும் சுகாதார துறை அலுவலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டு வெளிமாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தனர்.