தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், நேற்று (ஜூலை 25) ஒரே நாளில் 6 ஆயிரத்து 998 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் புதிதாக 162 பேருக்கு கரோனா உறுதி!
தஞ்சை: தஞ்சாவூரில் புதிதாக 162 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,892ஆக உயர்ந்துள்ளது.
Corona confirmed for 162 people in Tanjore today!
இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 162 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,892ஆக உயர்ந்துள்ளது.
மேலும், நேற்று ஏழு பேர் குணமடைந்து வீடு திரும்பியதன் மூலம், மாவட்டத்தில் இதுவரை 923 பேர் சிகிச்சை முடிந்து விடு திரும்பியுள்ளனர். அதேசமயம் மாவட்டத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்தனர்.