தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் மாநில அரசு விழாவில் இந்திப்பாடல்கள் பாடப்பட்டதால் சர்ச்சை! - Hindi songs at a government function

தஞ்சையில் அரசு விழா இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் இந்தி பாடல்கள் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

தஞ்சையில் அரசு விழாவில் இந்தி பாடல்கள் பாடப்பட்டதால் சர்ச்சை
தஞ்சையில் அரசு விழாவில் இந்தி பாடல்கள் பாடப்பட்டதால் சர்ச்சை

By

Published : Nov 22, 2022, 10:54 PM IST

தஞ்சாவூர்: பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நேற்று மாலை நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாடிய பாடகர்கள் ஹிந்திப் பட பாடல்களை பாடினர்.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு விழாவில் ஹிந்தி பாடல்கள் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி பட பாடல்கள் பாடியதும் ஹிந்தி திணிப்பு தான் என தமிழ் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தஞ்சையில் அரசு விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், மற்றொரு அரசு விழாவில் இந்தி பாடல் பாடப்பட்டது, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையில் மாநில அரசு விழாவில் இந்திப்பாடல்கள் பாடப்பட்டதால் சர்ச்சை!

இதையும் படிங்க: கல்லூரி மாணவர் ரயில் மோதி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details