கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தம் செய்யும் பணிக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிக்காக தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் அடைப்பு இயந்திரமான காமி என்ற லாரி வரவழைக்கப்பட்டது. கழிவுநீர் அடைப்பு வாகனத்துடன் ஒப்பந்த தொழிலாளர்கள் ராஜா தலைமையில் வீரமணி, சாதிக் பாட்சா (55) உள்பட நான்கு பேர் கழிவுநீர் அடைப்பு எடுப்பதற்காக பாதாள சாக்கடை கிணற்றில் இறங்கினர்.
அப்போது சாதிக் பாட்சா விஷவாயு தாக்கி பாதாள சாக்கடை கிணற்றில் விழுந்தார். உடன் இருந்தவர்கள் பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக் பாட்ஷாவை இரண்டு மணி நேரமாக வெளியே எடுக்க முடியாமல் தவித்தனர்.
விஷவாயு தாக்கி உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் தகவலறிந்த கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதாள சாக்கடையில் விழுந்த சாதிக் பாட்சாவை அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:
நான் மீசை வைத்து பூணூல் போட்டால் பிராமணர் என ஏற்றுக்கொள்வார்களா - சீமான் !