தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே உள்ள சங்கரனாதர் குடிகாடு பகுதியில் வசிப்பவர் வீரம்மாள். விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் புண்ணியமூர்த்தி, 2019ஆம் ஆண்டு உணவக வேலைக்காக துபாய்க்கு சென்றுள்ளார்.
பின்னர், சென்ற இடத்தில் மயங்கி விழுந்து தனது சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20 நாட்களாக உடல்நிலை குன்றிய நிலையில் துபாயில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.