தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் மாநில தலைவராக இருந்து வருபவர் அஸ்லம்பாட்ஷா. இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அஸ்லாம்பாட்ஷா குறித்து சமூக வலைதளத்தில் 'செம்மர கடத்தல் ஜாம்பவான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம்பாட்ஷா' என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அஸ்லம்பாட்ஷா ஏற்கனவே காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.இருந்தும் அவதூறு பரப்பிய நபர் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காங்கிரஸ் நிர்வாகி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு: டி.எஸ்.பி.,யிடம் புகார் - பட்டுக்கோட்டை டிஎஸ்பி
தஞ்சாவூர்: காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி குறித்து சமூக வலைதளத்தில் அவதுறாக தவறாக பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளனர்.
![காங்கிரஸ் நிர்வாகி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு: டி.எஸ்.பி.,யிடம் புகார் congress party](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11823165-40-11823165-1621445314145.jpg)
congress party
இதையடுத்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் நாகூர் கனி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷிடம் அந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். அப்போது சேதுபாவாசத்திரம் வட்டாரத் தலைவர் அப்துல் அஜிஸ், மல்லிப்பட்டினம் நகர துணைத்தலைவர் முகமது அப்துல்காதர், சேதுபாவாசத்திரம் நகர தலைவர் அல்லா பிச்சைஆகியோர் உடனிருந்தனர்.