தஞ்சாவூர்:பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அந்த மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு போட்டி அரசாங்கம் நடத்துகிறார்கள். அந்த சனாதனத்தை ஆதரித்து ஆளுநர் பேசுகிறார்.
தற்போது இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைத்தது காரல் மார்க்ஸ் என பேசுகிறார். எனவே உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தும் தமிழ்நாடு ஆளுநரை மாற்றக்கோரி டிசம்பர் மாதம் 29ஆம் தேதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடும்.
மேலும் மத்திய அரசு இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதைத் தொடர்ந்து அரசியல் அமைப்பு சட்டங்களை மீறி நடந்து வருவதாக உச்சநீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக நடைபெறும் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசை கடுமையாக எச்சரித்துள்ளது.
மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கை கையாண்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை முடிவு கொண்டு வரும் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டு வருகிறது. அந்த வாக்குறுதிகள் எதையும் ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை.