தஞ்சாவூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூதலூரில் சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பூதலூர் ஒன்றியம் முழுவதும் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு கட்டி கொடுத்து தற்போது இடியும் நிலையில் உள்ள வீடுகளை மறு கட்டமைப்பு செய்யவும், வீடற்ற அனைவருக்கும் பாரபட்சமின்றி அரசின் இலவசவீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒன்றிய செயலாளர் இரா.இராமச்சந்திரன் தலைமை தங்கினார்.
இதில், பூதலூர் ஒன்றியத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசு கட்டி கொடுத்த மற்றும்,இடியும் நிலையில் உள்ள வீடுகளை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும்,வீடற்ற அனைவருக்கும் அரசின் இலவசவீடு பாரபட்சமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கரோனா பேரிடர் காலத்தை கணக்கில் கொண்டு100 நாள் வேலை திட்டத்தை 200 ஆக உயர்த்தி, சட்டக்கூலியான ரூ.256-யை முழுமையாக வழங்க வேண்டும்.