தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், உள்ளாட்சித் தேர்தலை மறைமுகமாக நடத்தக்கூடாது, வெளிப்படையாக நடத்த வேண்டும். தீபாவளி பண்டிகையின்போது, டாஸ்மாக் விற்பனை குறித்து இலக்கு நிர்ணயித்த தமிழ்நாடு அரசு, உரம் கையிருப்பு குறித்த இலக்கை நிர்ணயிக்க தவறிவிட்டது.
’ரஜினி - கமல் அரசியலை விட படத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும்’ - முத்தரசன் - mutharasan pressmeet
தஞ்சாவூர்: ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலில் இணைவதை விட திரைப்படத்தில் இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் கூறியுள்ளார்.
Communist mutharasan pressmeet
உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலில் இணைவதை விட இருவரும் இணைந்து திரைப்படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும். மத்திய அரசு பொதுத் துறைகளை தனியார்மயமாக்கினால், பொருளாதாரம் சீர்குலையும் என்பதால் அவ்வாறு செய்யக் கூடாது” என்றார்.
இதையும் படிங்க: மக்களின் நலனுக்காக கமலுடன் இணைவேன் - ரஜினிகாந்த்