தமிழ்நாடு

tamil nadu

மின்னணு வாக்கு இயந்திரங்கள் இருப்பு அறையை ஆய்வு செய்த ஆட்சியர்

By

Published : Nov 4, 2020, 6:51 AM IST

தஞ்சாவூர்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரம் பாதுகாப்பு அறையை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் இருப்பு அறையை ஆய்வு செய்த ஆட்சியர்
மின்னணு வாக்கு இயந்திரங்கள் இருப்பு அறையை ஆய்வு செய்த ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ், கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரம் பாதுகாப்பு அறையில் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பேசிய மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த் ராவ் தெரிவித்தாவது, 'தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்பட்ட எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கன்ட்ரோல் யூனிட், வி.வி.பேட் போன்றவைகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு அறையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கொண்டு கண்காணிப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு மாதமும் இப்பாதுகாப்புப் பணியினை மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிக்கின்றோம்' எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் கோட்டாட்சியர் வேலுமணி, தேர்தல் வட்டாட்சியர் சந்தனவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details