தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு பணிகள் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு பணிகள் தொடங்கியுள்ளதால் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

thanjai temple

By

Published : Nov 21, 2019, 8:24 PM IST

தமிழனின் கட்டிடக் கலையை உலகுக்கு பறைசாற்றும் தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற உள்ளது.

இதன் முதற்கட்டமாக கோயிலுக்கு பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் சிரமமில்லாமல் பாதுகாப்பகாக வந்து செல்வதற்கு தனித்தனியாக பாதைகள் அமைப்பது, யாகசாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறதா என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் இன்று தஞ்சை பெரிய கோயிலில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

கோயிலில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ்

அப்போது, காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் உடன் தஞ்சை பெரிய கோயிலில் ஆய்வு நடத்தினர்.

இதையும் படிங்க:

தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details