தஞ்சாவூர்:முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமான நேற்று (டிசம்பர் 29) தஞ்சாவூர் சென்றார். மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகளை ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 30) மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு 98 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான 90 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தார்.
இதில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்ட மணிக்கூண்டுடன் கூடிய ராஜப்பா பூங்கா, கீழவாசல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சரபோஜி சந்தை ஆகியவை திறந்துவைக்கப்பட்டன.