தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூரில் ரூ. 1.70 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணி

தஞ்சாவூர்: அத்திவெட்டி பகுதியில் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணியை பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சேகர் துவக்கி வைத்தார்.

kudimaramathu
Citizenship Work starts in Thanjavur

By

Published : May 19, 2020, 5:35 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்துக்குட்பட்ட அத்திவெட்டி கிராமத்தில் உள்ள வீரையன் ஏரியில் குடிமராமத்து பணி துவக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சேகர் கலந்துகொண்டு குடிமராமத்து பணியை துவக்கி வைத்தார். மதுக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மதுக்கூர் வடக்கு கருப்பு ஏரி 90 லட்சம், ஆலத்தூர் புது ஏரி 50 லட்சம், அத்திவெட்டி வீரையன் ஏரி 30 லட்சம் என ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணி துவங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மதுக்கூர் ஒன்றிய தலைவர் அமுதா துரை செந்தில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகவேல், ஒன்றிய கவுன்சிலர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் மூலம், மதுக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும்.

இதையும் படிங்க:இலங்கை தமிழர்களுக்கு உதவிய நடிகர் ஆரி அர்ஜுனா

ABOUT THE AUTHOR

...view details