தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாம் மனிதர் கட்சியினர் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடத்தினர். இதில் நாம் மனிதர் கட்சியினர் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது எனவும், சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு இன்றியமையாதது எனவும், பலதரப்பட்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இந்தியாவில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ள இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.